
Drink
ஈப்போ ஒயிட் காபி
Ipoh white coffee
ஈப்போ ஒயிட் காபி அல்லது ஈப்போ வெள்ளை காபி (ஆங்கிலம்: Ipoh White Coffee மலாய்: Kopi Putih Ipoh சீனம்: 白咖啡) என்பது மலேசியா, பேராக், ஈப்போவில் தோன்றிய ஒரு பிரபலமான காபி பானமாகும். காபி கொட்டைகள் செம்பனை எண்ணெயில் (Palm Oil Margarine) வறுக்கப் படுகின்றன; அதன் விளைவாக வரும் கறுமைக் காபி அடர்பாலுடன் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது. வெள்ளை காபி (White Coffee) என்ற சொல் அதன் சீனப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பில் இருந்து உருவானது. 19-ஆம் நூற்றாண்டில், மலாயாவின் உள்ளூர் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய வந்த சீனக் குடியேறிகளால் இந்த ஈப்போ வெள்ளை காபி அறிமுகப்படுத்தப்பட்டது.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஈப்போ ஒயிட் காபி, CC BY-SA 4.0.
中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · English