
பன்னாட்டு காபி நிறுவனம்
International Coffee Organization
காபியின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) அனுசரணையில் பன்னாட்டு காபி நிறுவனம் (International Coffee Organization (ICO)) 1963 ஆம் ஆண்டு இலண்டனில் அமைக்கப்பட்டது. இது காபி வர்த்தக மேம்பாட்டிற்காக சர்வதேச காபி ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது 1962 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் கையெழுத்திடப்பட்ட ஐந்தாண்டு சர்வதேச காபி ஒப்பந்தத்தின் விளைவாக, 1968, 1976, 1983, 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் லண்டனில் உள்ள ஐ.சி.ஓவில் மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பன்னாட்டு காபி குழுமமானது மிக உயர்ந்த அதிகாரம் உடைய ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது குழுமம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கூடி காபி வர்த்தகம் குறித்த விடயங்கள் குறித்து விவாதிக்கவும், செயல்முறைகள் குறித்த ஆவணங்களை அங்கீகரிக்கவும் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க கூடுகிறது. ஐ.சி.ஓவின் தலைமையகம் லண்டனில் 222 கிரேஸ் இன் சாலையில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய நிர்வாக இயக்குநராக இந்தோனேசியாவினைச் சார்ந்த இமான் பாம்பகயோ உள்ளார். ஜூன் 2018 இல் சர்வதேச காபி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பின்னர், ஐ.சி.ஓ உறுப்பினர் அரசாங்கங்கள் உலக காபி உற்பத்தியில் 98% மற்றும் உலக நுகர்வுவில் 67% பங்கு வகிக்கின்றனர்.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பன்னாட்டு காபி நிறுவனம், CC BY-SA 4.0.