இந்தியாவில் காபி உற்பத்தி
India
இந்தியாவில் காபி உற்பத்தி என்பது தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர்ப் பகுதிகளிலேயே மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் மொத்த 8200 டன் காபி உற்பத்தியில் கர்நாடகம் 71%, கேரளம் 21%, தமிழகத்தில் 5% உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய மலை சாரல்களில் நிழலில் விளையும் இந்திய காபி கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாக கருதப்படுகிறது.. இந்தியாவில் சுமார் 2,50,000 காபி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 98 % சிறு விவசாயிகள் ஆவர்.. 2009 ஆண்டின் கணக்கீட்டின்படி உலக காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4.5 % மட்டுமே. நாட்டின் காபி உற்பத்தியில் கிட்டத்தட்ட 80% ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இந்தியாவில் காபி உற்பத்தி, CC BY-SA 4.0.