அஜய்பால் சிங் பங்கா
Ajay Banga
அஜய்பால் சிங் பங்கா (Ajaypal Singh Banga) (பிறப்பு 1960) இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். அவர் மாஸ்டர்கார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். முன்னதாக அதன் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான பங்கா 2010 சூலை 1 முதல் முதன்மை செயல் அலுவராகவும், இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உடனடியாக செயல்படுவார் என்று மாஸ்டர்கார்டு ஏப்ரல் 2010 இல் அறிவித்தது. மார்ச் 1997 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இராபர்ட் டபிள்யூ. செலாண்டருக்குப் பிறகு பங்கா அப்பதவிக்கு வந்தார். பிப்ரவரி 2015 இல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான அதிபரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற பங்காவை நியமித்தார். இந்தியாவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க-இந்தியா வர்த்தக கூட்டமைப்பின் (யு.எஸ்.ஐ.பி.சி) முன்னாள் தலைவரும், சர்வதேச வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார். இவர் டொவ் கெமிக்கல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்; வெளிநாட்டு உறவுகள் அமைப்பின் உறுப்பினர்; மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச வர்த்தக அமைப்பின் உறுப்பினர் போன்ற பொறுப்புகளிலும் இருக்கிறார். இந்திய அரசு இவருக்கு 2016 ல் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அஜய்பால் சிங் பங்கா, CC BY-SA 4.0.
中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español · English